புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (14:22 IST)

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல். 

 
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.