செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (06:48 IST)

மழையால் பறிபோன இந்தியாவின் வெற்றி! முதல் டெஸ்ட் டிரா

மழையால் பறிபோன இந்தியாவின் வெற்றி! முதல் டெஸ்ட் டிரா
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது
 
நான்காம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி 5வது நாளில் மேலும் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. ஆனால் ஐந்தாவது நாளில் காலை முதலே மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஐந்தாவது நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது 
 
இதனை அடுத்து முதல் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா என நடுவர்கள் அறிவித்தனர். ஐந்தாவது நாளில் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் இந்தியா இருந்த நிலையில் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி சதம் அடித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்:
 
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 183/10
 
ரூட்: 64
பெயர்ஸ்டோ: 29
சாம் கர்ரன்: 27
 
இந்தியா முதல் இன்னிங்ஸ்: 278/10
 
கே.எல்.ராகுல்: 84
ஜடேஜா: 56
பும்ரா: 28
 
இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 303/10
 
ரூட்: 109
பெயர்ஸ்டோ: 30
சாம் கர்ரன்: 32
 
இந்தியா 2வது இன்னிங்ஸ்: 52/1
 
கே.எல்.ராகுல்: 26 அவுட்
ரோஹித் சர்மா: 12 நாட் அவுட்
புஜாரா: 12 நாட் அவுட்