1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 ஜூன் 2023 (15:02 IST)

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் துறைகள் மாற்றம்; யார் யாருக்கு எந்தெந்த துறைகள்

தமிழ்நாட்டில் ஒருசில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் யார் யாருக்கு எந்தெந்த துறைகள் மாற்றப்பட்டுள்ளது என்பதை தற்போது பார்ப்போம்,
 
நில நிர்வாகத்துறை ஆணையர் பீலா ராஜேஷ், எரிசக்தித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
எரிசக்தித்துறை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், வணிகவரித்துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநர் விஜய ராணி கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
எரிசக்தி நிறுவன நிர்வாக இயக்குநர் ஆசியா மரியம் சிறுபாண்மையினர் நலத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
ஊரக வளர்ச்சி இணை செயலாளர் சந்திர சேகர் சஹாமுரி பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
Edited by Mahendran