செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 ஜூன் 2023 (10:32 IST)

நீட் தேர்வில் 2 மாணவர்கள்ஒரேமதிப்பெண் எடுத்திருந்தால்.. விதிமுறையில் மாற்றம்..!

இளநிலை மருத்துவர்களுக்கான நீட் தேர்வில் இரண்டு மாணவர்கள் ஒரே மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில் தரவரிசை பட்டியலில் இயற்பியல் பாடத்திற்கு முன்னுரிமை அளிக்க தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது
 
இதுவரை இளநிலை மருத்துவ கல்வியின் விதிமுறைப்படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் ஒரே மாதிரி தெரியாத மதிப்பெண் அல்லது சதவீதம் எடுத்திருந்தால் அவர்கள் உயிரியல் பாட மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரியல் பாட மதிப்பெண்ணும் ஒரே மாதிரியாக இருந்தால் வேதியல், அதற்குப் பின் இயற்பியல் மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மூன்று பாடத்திலும் ஒரே மாதிரியான மதிப்பெண் எடுத்திருந்தால் மூத்த வயது உடையவருக்கு தரவரிசையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
 
ஆனால் தற்போது இந்த விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.  நீட் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றால் உயிரியல் பாடத்திற்கு பதிலாக  இயற்பியல் பாடம் மதிப்பெண்ணுக்கு முன்னுரிமை தர தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது. இயற்பியல் வேதியல் கடைசியாக உயிரியல் என்ற மதிப்பில் மதிப்பெண்களுக்கு முன்னுரை வழங்கப்பட்டு தரவரிசை நிர்ணயிக்கப்படப்பட்டுள்ளது
 
இதிலும் தேர்வு காணப்படவில்லை என்றால் கணினி மூலம் குலுக்கல்  நடத்தப்பட்டு தகுதி பட்டியல் தயாரிக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
 
மேலும்  இளநிலை மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள் ஒன்பது ஆண்டுகளுக்கு படிப்பை முடிக்க வேண்டும் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய விடுமுறைகள் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva