வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 3 ஜனவரி 2024 (07:13 IST)

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு அறிவிப்பு.. ரூ.1000 இல்லையா?

தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
இந்த அறிவிப்பில்  ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என்றும் இதற்காக ரூபாய் 238.92 கோடி செலவிடப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
2024 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்ப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இதுகுறித்த தமிழக அரசின் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
 
எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்கான, பொங்கல் பரிசுத் தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கி 31.10.2023 அன்றைய தேதி நிலவரப்படி, 2,19,57,402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடும் பட்சத்தில் தோராயமாக ரூ.238,92 கோடி செலவினம் ஏற்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த அறிவிப்பில் ரூ.1000 வழங்குவது குறித்த அறிவிப்பு இல்லை என்றாலும், ரொக்கம் தருவது குறித்த அறிவிப்பு தனியாக வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva