பொங்கல் ரேஸில் இணைந்த மூன்றாவது படம்… அருண் விஜய்யின் அச்சம் என்பது இல்லையே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அருண் விஜய் கடந்த ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் மிஷன் 1 என்ற படத்தில் நடித்து முடித்தார். இந்த படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் பெரும்பகுதி நடந்தது. அருண் விஜய், ஏமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய வேடங்களில் நடிக்க படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை லைகா வாங்கி வெளியிடுவதாக அறிவித்தது.
ஆனால் அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆகியும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. சுமார் 30 கோடி ரூபாய் செலவில் இந்த படம் உருவாகியுள்ளதால், அந்த அளவுக்கு பிஸ்னஸ் செய்யமுடியாமல் படக்குழு தடுமாறி வருவதாகவும், அதனால் ரிலீஸ் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் இந்த படம் அடுத்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்போது அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.