1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2024 (11:02 IST)

லாட்டரியில் கிடைத்த 2.5 கோடியை 90 வயது பெரியவர் என்ன செய்தார் தெரியுமா? குவியும் பாராட்டுக்கள்..!

பஞ்சாப் மாவட்டத்தில் 90 வயது குருதேவ் சிங் என்பவருக்கு சமீபத்தில் லாட்டரி டிக்கெட்டில் 2.5 கோடி ரூபாய் பரிசுகள் கிடைத்த நிலையில் அந்த பணத்தை அவர் சமூக சேவைக்காக பயன்படுத்தி வருகிறார்.
 
 குருதேவ் சிங் அவர்களுக்கு 2.5 கோடி லாட்டரி சீட்டு பரிசு கிடைத்ததும் தன்னுடைய வீட்டை மராமத்து செய்தார். அதன் பிறகு மகன் மற்றும் மகள்களுக்கு புதிதாக வீடு கட்டிக் கொடுத்தார் 
 
இதனை அடுத்து அவர் மீதமுள்ள பணத்தை தொடர்ந்து சமூக சேவைகள் செய்து வருவதாக தெரிகிறது. அவர் இருக்கும் பகுதியில் உள்ள சாலைகளை அவரே செலவு செய்து சீரமைத்து வருகிறார். அதுமட்டுமின்றி அந்த பகுதியில் ஏராளமான மரங்களை நட்டு வருகிறார் என்பதும் தினமும் அந்த மரங்களுக்கு அவர் ரிக்ஷாவில் சென்று தண்ணீர் ஊற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 நான் பணத்தை சிறந்த வேலைக்கும் சமூக சேவைக்கும் செலவு செய்ய வேண்டும் என்று விரும்பினேன் என்றும் இந்த ஊரில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் இந்த பணத்தை செலவு செய்து வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய பணியை அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்
 
Edited by Mahendran