3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல்.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!
மூன்று கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என்று கூறியிருந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளிலும் மின் நுகர்வை துல்லியமாக கணக்கெடுக்கவும், மின் இழப்பை தடுக்கவும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு காலக்கெடு கொடுத்துள்ளது. இதற்கு முன்னர், தமிழக அரசு ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் வெளியிட்டு ரத்து செய்த நிலையில், தற்போது 20 ஆயிரம் கோடி செலவில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய மீண்டும் டெண்டர் கோரியுள்ளது.
ஆறு கட்டமாக மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என்றும், ஒரே மாதத்தில் டெண்டர் நடவடிக்கைகள் இறுதி செய்யப்பட்டு விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் தொடங்க இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Edited by Mahendran