அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்! – தனியார் பள்ளி இயக்குனரகம் உத்தரவு!
தமிழ்நாட்டின் அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயமாக்க உத்தரவு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாய பயிற்று மொழியாக உள்ளது. மற்ற வகை பள்ளிகளில் பலவற்றில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை என்ற புகார்கள் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குறைவான மாணவர்களே தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்றிருந்தனர்.
இந்நிலையில் தனியார் பள்ளிகள் இயக்குநர் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாய பாடமாக்க உத்தரவிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், 2024-25ம் ஆண்டுக்குள் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழி கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை நியமிக்கவும், 9 முதல் 12 வகுப்புகளில் கூடுதல் மொழியாக தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K