வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2019 (15:23 IST)

தமிழ் அழகானது, தமிழர்கள் அபூர்வமானவர்கள் : மோடி டுவீட்., ஹெச். ராஜா ’டச்’.

சமீபத்தில், சீன அதிபர் ஜிங்பின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் முறைசாரா உச்சி மாநாடு சென்னையிலும் , மாமல்லபுரத்திலும் நடைபெற்றது. இதில் தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் மோடி வேட்டி சட்டை அணிந்து வந்து தமிழர்களுக்கு நெருக்கமானவர் ஆனார்.
இந்நிலையில், பிரதமர்  மோடி தனது டுவிட்டர் பக்கதில் தமிழ்மொழி பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறார்.
 
அதில், ’உலகில் மிக பழமையான மொழி என்ற சிறப்பினைக் கொண்டு இயங்கிவருகிற மொழியில் என்னை  வெளிப்படுத்தியற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.’தமிழ் மொழி அழகானது ; தமிழர்கள்  அபூர்வமானவர்கள் என்று அவர் பதுவிட்டிருந்தார்.
 
அதற்கு, பாஜக தேசிய செய்லர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் மோடியை டேக் செய்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ’தமிழ் அழகானது, தமிழர்கள் அபூர்வமானவர்கள்...!’ என்று தெரிவித்துள்ளார்.
 
இதற்கு முன்னதாக ,இன்று போலீஸ் தினம் ஆகையால் , அவர், காலம், நேரம், ஒய்வு, உளைச்சல், உறக்கம் இவை அனைத்தையும் பாராமல் நம் நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்போடு இருக்கவேண்டும் என்பதற்காக பல தியாகங்களை செய்கின்ற நம் காவலர்களுக்கு என் வீர வணக்கம் ! என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.