செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 19 அக்டோபர் 2019 (16:28 IST)

மோடி பார்த்த வெண்ணை உருண்டை – இனிமேல் கட்டணம் !

சமீபத்தில் மாமல்லபுரத்தில் மோடி சுற்றிப்பார்த்த வெண்ணை உருண்டைக்கு இனிமேல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக மகாபலிபுரம் இருந்து வருகிறது. சமீபத்தில் தமிழகம் வந்த மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங் ஆகியோர் மகாபலிபுர சிற்பங்களை சுற்றிப்பார்த்தனர். இருவரின் சந்திப்பை அடுத்து மகாபலிபுரத்துக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து இன்று முதல் வெண்ணை உருண்டையைப் பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தொல்லியல் துறை சார்பாக சொல்லப்படுகிறது. உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 40ம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ரூ. 600ம் செலுத்தினால் மட்டுமே பார்வையிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுநாள் வரை வெண்ணை உருண்டையை பயனிகள் இலவசமாக சுற்றிப்பார்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டண உயர்வு சுற்றுலாப் பயனிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.