”சர்க்கஸ் காட்டாமல் பொருளாதாரத்தை மேம்படுத்துங்கள்” .. மோடி அரசை சாடும் பிரியங்கா

Arun Prasath| Last Modified சனி, 19 அக்டோபர் 2019 (17:15 IST)
இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதால், பலரும் மத்திய அரசை விமர்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி, “சர்க்கஸ் காட்டாமல் பொருளாதாரத்தை மேம்படுத்துங்கள்” என பேசியுள்ளார்.

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். மேலும் பொருளாதாராத்திற்கான நோபல் பரிசு வாங்கிய அபிஜித் பேனர்ஜி, இந்திய நாட்டின் பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளது, அது உடனடியாக சீரடையும் என கூறமுடியாது” என்று கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ”பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி உள்ளது, அதனை மேம்படுத்துவதே மத்திய அரசின் வேலை, காமெடி சர்க்கஸ் காண்பிப்பது அல்ல” என கூறியுள்ளார்.

முன்னதாக வாகன உற்பத்தியில் மந்தம் ஏற்பட்ட நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அனைவரும் ”ஓலா” டாக்சி உபயோகிப்பதால் தான் வாகன உற்பத்தி குறைந்தது என கூறினார். இதனை பலரும் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :