ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (17:32 IST)

தாம்பரம் - செங்கோட்டை இடையே புதிய அதிவேக ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்...!

Train
சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு புதிய அதிவேக ரயில் ஏப்ரல் 16ஆம் தேதியிலிருந்து இயங்க இருக்கும் நிலையில் இந்த ரயிலை நாளை பிரதமர் மோடி தொடக்கி வைக்க உள்ளார்.
 
ஏப்ரல் 16 முதல் தாம்பரம் முதல் செங்கோட்டை வரை இயங்கவிருக்கும் புதிய அதிவேக ரயில் திருவாரூர் காரைக்குடி வழியாக இயக்கப்பட உள்ளது. ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று தினங்களில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கும்,  திங்கள் புதன் வெள்ளி ஆகிய மூன்று தினங்களில் செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கும் இந்த ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
ஏப்ரல் 16ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை இந்த ரயில் வாராந்திர ரயிலாக இயக்கப்படும் என தென்னிந்திய ரயில்வே அறிவித்துள்ளது . இதனை அடுத்து தென்மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Mahendran