ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2024 (18:58 IST)

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நிகழ்ந்த ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் கூட்டத்தில் சிக்கி 122 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாமியார் ஒருவர்  ஆன்மீக நிகழ்ச்சி நடத்திய நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் அதில் சிக்கி 122 பேர் பரிதாபமாக பலியானதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படுகாயம் அடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்ததால் கடுமையான நெரிசல் ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் நகர முடியாத அளவுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் இந்த துயர சம்பவம் ஏற்பட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பலியான 122 பேர்களில் 40 பெண்கள் என்றும் கூறப்படும் நிலையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Edited by Siva