புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 9 பிப்ரவரி 2022 (15:33 IST)

அரசின் சாதனையை எடுத்துக்கூறி....வாக்கு சேகரித்தேன் - உதயநிதி டுவீட்

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில்,  இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிந்துள்ளது. ஏற்கனவே திமுக,  அதிமுக, ம.நீ.ம., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில்,   தமிழகத்தில்  திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து நகராட்சித் தேர்தலை முன்னிட்டு திமுக கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை  காணொலி  வாயிலான பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதய  நிதி தனது டுவிட்டர் பக்கத்தில், ஒவ்வொரு வாக்காளராக நேரில் சந்தித்து கழக அரசின் சாதனையை எடுத்துக்கூறிடும் பணியை நிறைவேற்றி உள்ளாட்சியிலும் நமது ஆட்சி மலர்ந்திட செய்வோமென,கரூர் மாவட்டம்,புகழூர்-வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தேன். @V_Senthilbalaji எனத் தெரிவித்துள்ளார்.