1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (20:20 IST)

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 19ஆம் தேதி அரசு விடுமுறை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதை தெரிந்ததே
 
இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக  டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பிப்ரவரி 17ஆம் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது