திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (11:47 IST)

மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள்; இன்று முதல் விண்ணப்பம்! – மருத்துவ கல்வி இயக்ககம்!

மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெறுவதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த நர்சிங், பி.பார்ம், ரேடியோகிராபி உள்ளிட்ட 19 வகையான துணை பட்டப்படிப்புகள் உள்ளன. இந்த பட்டப்படிப்பில் சேர 12வது முடித்திருந்தால் போதுமானது.

இந்நிலையில் மருத்துவம் சார்ந்த இந்த பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்களை http://tnhealth.tngov.in மற்றும் http://tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் தரவிறக்கி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தரவிரக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து நவம்பர் 8ம் தேதி மாலை 5 மணிக்குள் குறிப்பிடப்பட்டுள்ள விலாசமான செயலாளா், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியாா் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.