வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (06:41 IST)

பிரேத பரிசோதனை முடிந்தது! சுஜித்தின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தின் உயிரை 80 மணி நேரம் போராடியும் காப்பாற்ற முடியாத நிலையில் இன்று அதிகாலை சுஜித்தின் பிணம் மீட்கப்பட்டது. இதனையடுத்து சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சற்றுமுன் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
 
பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து சுஜித்தின் உடல் கல்லறை தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
முன்னதாக மணப்பாறை மருத்துவமனை வளாகத்தில் குழந்தை சுஜித்தின் உடலுக்கு அமைச்சர்கள் உதயகுமார், விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.