புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (08:59 IST)

மூடப்பட்டது குழந்தை சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நிலையில் அந்த சிறுவனை மீட்க தமிழக அரசு மற்றும் மத்திய மாநில பேரிடர் மீட்பு குழுவினர் பெரும் போராட்டம் நடத்தினர் 
 
இந்த போராட்டம் இறுதியில் தோல்வி அடைந்ததை அடுத்து இன்று அதிகாலை சிறுவனின் உடல் மட்டுமே மீட்கப்பட்டது. இந்த நிலையில் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து சிறுவனின் உடல் அருகில் உள்ள கல்லறையில் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது 
 
இந்த நிலையில் சிறுவன் விழுந்த நடுக்காட்டுபட்டியில் உள்ள ஆழ்துளை கிணறு தற்போது காங்க்ரெட் கலவை கொண்டு மூடப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி சிறுவனை மீட்க தோண்டப்பட்ட சுரங்க பள்ளத்தையும் மூடுவதற்கு மீட்பு குழுவினர் முடிவு செய்துள்ளனர்.  ஆனால் அந்த சுரங்கத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் முதல் கட்டமாக தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளதாகவும் அதனை அடுத்து அந்த சுரங்கமும் காங்க்ரெட் கலவை கொண்டு மூட திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 
 
அதே மேலும் தமிழகத்தில் இதுவரை மூடாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்