புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (11:51 IST)

ஈபிஎஸ் நோ யூஸ்; ஓபிஎஸ்யுடன் மீட்டிங்: தேமுதிக சுதீஷ் அதிரடி மூவ்!!

தேமுதிக சுதீஷ், துணை முதல்வர் .பன்னீர் செல்வத்தை சந்தித்து எம்பி சீட் குறித்து ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார். 
 
வரும் மார்ச் 26 ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து 6 பேர் ராஜ்யசபா தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 3 எம்பி பதவி திமுகவுக்கும் 3 எம்பி பதவி அதிமுகவுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூவர் பெயர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முக ஸ்டாலின் கூட்டணி கட்சிகள் யாருக்கும் எம்பி பதவி அளிக்காமல் திமுக வேட்பாளர்களையே மூவரையும் தேர்வு செய்தார். 
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ராஜ்யசபா வேட்பாளர் யார் என்பது குறித்த கேள்வி அரசியல் வட்டாரத்தில் இருந்த நிலையில் தற்போது அதிமுக வேட்பாளராக கேபி முனுசாமி, தம்பித்துரை ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு தொகுதியை கூட்டணி கட்சியான தமாக தலைவர் ஜிகே வாசன் அவர்களுக்கு அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனிடையே தேமுதிக ராஜ்யசபா சீட் ஒன்று வேண்டும் என கேட்டு வரும் நிலையில், தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். ஆனால், இதில் ஏதும் திருப்தி ஏற்படாத நிலையில் இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசியுள்லார்.  
 
சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனை முடிவில் என்ன நடந்ததென்று முழு விவரம் வெளியாகாத நிலையில், எம்பி சீட் விவகாரம் குறித்து பேசியிருக்க கூடும் என தெரிகிறது.