வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2020 (11:10 IST)

இன்னும் 100 வருஷமானாலும் அதிமுக ஆட்சிதான்! – எடப்பாடியார் உறுதி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அதிமுக இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற ‘சொல்வோம் வெல்வோம்’ நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை அதிமுகவினர் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வரும் அதிமுகவினர் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் ‘சொல்வோம் வெல்வோம்’ என்ற நிகழ்ச்சியை இலக்கிய அணி சார்பில் ஏற்பாடு செய்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் இன்று நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய அவர் அதிமுக அரசு மாணவர்களுக்காக செய்துள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.

அப்போது பேசிய அவர் ”தமிழகத்தில் நிலையான உறுதியான ஆட்சியை தர வேண்டும் என்பது அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு. அவரது கனவுப்படியே இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் நடைபெறும். அடுத்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மை வெற்றி பெறும் “ என கூறியுள்ளார்.