Daily Horoscope
✕

சென்னையை வெளுக்கும் திடீர் கனமழை! – இன்ப அதிர்ச்சியில் மக்கள்!

Written By Prasanth Karthick
Updated: திங்கள், 5 ஜூன் 2023 (15:30 IST)
சென்னையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வரும் நிலையில் புறநகர் பகுதிகளில் திடீர் மழை பெய்துள்ளது.



கோடை காலம் நடந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. தலைநகரான சென்னையில் வெயில் கடுமையாக வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை நாளன்று வெயில் 106 டிகிரி பாரன்ஹீட்டில் வீசிய நிலையில் பலரும் மெரினா கடற்கரை உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளுக்கு படையெடுத்தனர்.

இந்நிலையில் இன்ப அதிர்ச்சியாக தற்போது சென்னை புறநகர் பகுதிகளில் திடீரென கனமழை பெய்து வருகிறது. வண்டலூர், பெருங்களத்தூர், மண்ணிவாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
அடிக்கும் வெயிலுக்கு நடுவே திடீரென பெய்து வரும் கனமழை அப்பகுதி மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

எல்லாம் காட்டு

தங்கம் விலை எனது அறிவிப்பினால் தான் குறைந்தது; பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் மீண்டும் மழை.. நாளை 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்...

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி காலி.. அதிகாரபூர்வ அறிவிப்பு.. மொத்தம் 6 தொகுதிகள் காலி..

இத்தாலியில் உள்ள சோனியா காந்தியின் வீட்டுக்கு இந்தியன் ஹவுஸ் என பெயர்.. மியூசியமாக மாற்ற திட்டம்..

முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பாரபட்சமாக செயல்படுகிறார்.. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி...

அடுத்த கட்டுரையில்
Show comments