இன்று முதல் இயங்குகிறது மின்சார ரயில்சேவை: அரசு ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் ரயில் போக்குவரத்து உள்பட எந்த போக்குவரத்தும் இல்லாமல் இருந்தது
இந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் ஓரளவு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் ஆகியவை இயங்க தொடங்கியது. இந்த நிலையில் மின்சார ரயில் அக்டோபர் 5 முதல் இயங்கும் என ஏற்கனவே தென்னிந்திய ரயில்வே தெரிவித்திருந்த நிலையில் இன்று முதல் மின்சார ரயில் சேவை சென்னையில் தொடங்கப்பட உள்ளது
ஆனால் அதே நேரத்தில் பொதுமக்களுக்கு இந்த ரயிலில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தற்காலிகமாக இந்த புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு மற்றும் வேளச்சேரியில் இருந்து அரக்கோணம், கும்மிடிப் பூண்டி ஆகிய வழித்தடங்களில் 38 ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில்கள் இயங்கினாலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது