1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (12:52 IST)

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: கனல்கண்ணன் தலைமறைவா?

kanal
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது
 
சமீபத்தில் ஸ்ரீரங்கம் பகுதியில் நடந்த விழா ஒன்றில் பேசிய கணல் கண்ணன் ஸ்ரீரங்கம் கோவில் முன் இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறினார்
 
அவருடைய இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் கனல்கண்ணன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது 
 
கண்ணன் மீது தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் புகார் அளித்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது