அரசியலுக்கு வரும் உங்களமாதிரி ஆளுங்களுக்கு தேர்வு இல்லையா? கமலை கேள்விகளால் அதிரவைத்த மாணவர்கள்

ஞாயிறு, 4 நவம்பர் 2018 (12:12 IST)
சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி கமல் ஹாசன் பங்கேற்றார்.


அவரிடம் மாணவர்கள் சரமாரியாக கேள்வி கேட்டு அசரடித்தனர். ஒரு மாணவர், கமலிடம், 'ஐஏஎஸ், ஐபிஎஸ் அதற்கென ஒரு தேர்வு உள்ளது, ஆனால் அரசியலில் பொறுப்புக்கு வருபவர்கள் பிரபலமான நபராக இருந்து சிஎம் ஆகிவிடுகிறார்கள்? அவர்களும் ஏதாவது தேர்வு எழுதவேண்டும் அல்லவா?'  என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் அளித்த கமல், "சரியான கேள்வி, அந்த தேர்வுக்கான கேள்வித்தாளைத்தான் நான் தயார் செய்து பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதற்கான ஒரு பதில்தான் இது. வேறு யாரும் இதைச் செய்கிறார்களா? எனக்குத்தெரியாது.

தைரியமாக கூட்டத்தில் வந்து கேள்வி கேளுங்கள் என்று நின்று , இந்த அக்னிப்பரிட்சையில் வென்றபிறகு நீங்கள் என் கற்பைச் சோதிக்க முடியாது" என்றார். 

அரசியலில் வருவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருப்பதாக கருதுகிறீர்கள்? என மற்றொரு மாணவர் கேள்வி கேட்டார் . அதற்கு கமல், நேர்மை, அது இருப்பதாக கருதுகிறேன் என்றார் 

எல்லாம் காட்டு

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments