தமிழகத்தில் 11 பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா !!
தஞ்சையில் மேலும் 17 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் பீதி அடைந்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் தெரிவித்து வருகின்றனர். எனவே, புதுச்சேரியில் மார்ச் 22 முதல் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 9,10,11 வகுப்புகளுக்கு மார்ச் 22 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை என தலைமைச் செயலர் அறிவித்தார். இதனிடையே, தஞ்சையில் மேலும் 17 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே 11 பள்ளிகளில் 168 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மேலும் 12 பேருக்கு பாதிப்பு உறுதியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.