புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2020 (14:48 IST)

திருப்பத்தூர் டூ திருநெல்வேலி - தோராயமாக நம்பர் போட்டு பெண்களை மடக்கிய ஆசாமி!

ட்ரூ காலர் அப்ளிகேசன் மூலமாக பெண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வலையில் வீழ்த்திய ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப அப்ளிகேசன்கள் எந்த அளவுக்கு வளர்ச்சியை அளித்துள்ளதோ, அதே அளவு ஆபத்துகளையும் ஏற்படுத்துகின்றன. தனக்கு கால் செய்பவர் யார் என அறிந்து கொள்ள உதவும் ட்ரூ காலர் அப்ளிகேசனை வைத்தே பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றியுள்ளார் ஆசாமி ஒருவர்.

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ் அப்பில் தெரியாத எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அவர் அதற்கு பதிலளிக்காமல் இருந்த நிலையில் நாள்தோறும் மெசேஜுகள் வந்து கொண்டே இருந்துள்ளன. இதனால் மாணவி மெசேஜ் அனுப்புவதை நிறுத்துமாறு அந்த எண்ணிற்கு பதில் அளித்துள்ளார். ஆனால் அந்த எண்ணிலிருந்து ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வந்துள்ளன. இதையடுத்து அந்த பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் அந்த எண் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வினோத் என்பவருடையது என்பதை கண்டறிந்தனர். மேலும் சென்னையில் பதுங்கியிருந்த வினோத்தை கைது செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கால் செய்பவர்களின் நம்பரை கொண்டு பெயரை கண்டுபிடிக்கும் ட்ரூ காலர் அப்ளிகேசனில் தோராயமாக 10 எண்களை போடும் வினோத் அதில் பெண்கள் பெயர் வந்தால் மட்டும் அந்த எண்ணை சேமித்து கொண்டு மேசேஜ் அனுப்பி வந்திருக்கிறார். அதில் ரிப்ளை செய்யும் பெண்களிடம் காதல் வார்த்தை பேசி அவர்களது நிர்வாண படங்களை பெறுவது, பிறகு அதைவைத்தே மிரட்டி அவர்களை இணங்க வைப்பது என பல குற்றங்களை செய்துள்ளதை போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

பெண்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இதுபோல புகைப்படங்கள் அனுப்புவது, பேசுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என போலீஸார் வலியுறுத்தியுள்ளனர்.