ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2020 (13:26 IST)

என்னதான் புலியா இருந்தாலும், எங்க முன்னே பூனைதான்! – செல்லூர் ராஜூ

நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் திமுக அடிக்கடி வெளிநடப்பி செய்தது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. முதல் நாள் ஆளுனர் உரையின்போது குடியுரிமை சட்டம் குறித்து பேச அனுமதி வழங்காததை கண்டித்து திமுக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இரண்டாம் நாளும் வெளிநடப்பு செய்த நிலையில் கடைசி நாளான நேற்று குடியுரிமை சட்டம் குறித்து திமுக கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆலோசித்து குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை இயற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் திமுக அளித்த தீர்மானம் பரிசீலனையில் இருப்பதாக தவிர்க்கப்பட்டதால் கடைசி நாளான நேற்றும் திமுக வெளிநடப்பு செய்தது. தொடர்ந்து திமுக வெளிநடப்பு செய்ததை குறித்து பேசியுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ ”சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக தாங்கள் நினைத்தது எதையும் செய்யமுடியவில்லை. திமுக வெளியே புலியை போல திரிந்தாலும், பேரவையில் பூனையாகதான் இருந்தார்கள்” என கூறியுள்ளார்.