ஏ.சி பஸ்ஸில் இனி சொகுசா போகலாம்: டிக்கெட் விலையை குறைத்த அரசு!
அரசு ஏ.சி பேருந்துகளில் மக்கள் பயணிப்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்க டிக்கெட் விலையை குறைத்துள்ளது அரசு.
தமிழக அரசு சார்பில் சென்னை உள்ளிட்ட நகர பகுதிகளில் உள்ளூர் ஏ.சி பேருந்துகள் இயங்கி வருகின்றன. ஆனால் ஏ.சி பேருந்துகளில் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக மக்கள் பலர் கருதுகின்றனர். அதனால் ஒருசிலரை தவிர மற்ற பயணிகள் ஏ.சி பேருந்து வசதியை பயன்படுத்துவது இல்லை.
அவர்களது பகுதிகளில் ஏ.சி பேருந்து வசதி இருந்தாலும் காத்திருந்து சாதாரண கட்டண பேருந்துகளில் கூட்ட நெரிசலில் செல்லும் நிலை உள்ளது. ஏசி பேருந்து பயன்பாட்டை அதிகரிக்கவும், பேருந்துகளில் மக்கள் கூட்ட நெரிசலில் செல்வதை தவிர்க்கவும் ஏ.சி பேருந்து டிக்கெட் கட்டணத்தை குறைத்துள்ளது போக்குவரத்து கழகம்.
அதன்படி ஏ.சி பேருந்துகளில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணமாக 15 ரூபாயும், அதிகபட்சமாக 40கி.மீ தூரத்திற்கு பயணிக்க 60 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் கட்டண குறைப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.