Daily Horoscope
✕

அரசு அங்கீகரித்த செய்தியாளர்களுக்கு ரூ. 3000 நிவாரண உதவி !

Written By Sinoj
Updated: வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (14:39 IST)
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,301 ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் ஒரேநாளில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் முதல் 10 நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது. ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையிலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வண்ணமே உள்ளது. 

இந்நிலையில் சற்றுமுன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,301ஆக உயர்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது, 157 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 234 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழக அரசு  மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

தமிழகத்தில் ஊரடங்கால் பாதிப்படைந்த மக்களுக்கு, வெளிமாநில மக்களுக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.

இந்த நிலையில்,  அரசு அங்கீகரித்த செய்தியாளர்களுக்கு தலா ரூ.3,000 நிவாரண உதவி வழங்கப்படும் என  முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments