திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : வியாழன், 2 ஏப்ரல் 2020 (22:31 IST)

கொரனோ தடுப்பு நடவடிக்கைக்காக ஒருநாள் ஊதியத்தை வழங்கிய போக்குவரத்து தொழிலாளர்கள் !!

போக்குவரத்து தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியம் 14 கோடியே 10 லட்சம் கொரனோ தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரிடம் வழங்கப்படும் - போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார்.

கரூர் நகரில் டெல்லிப்சென்று திரும்பியவர்கள் வசிக்கும் பகுதிகள் மூடப்பட்டுள்ளது. காசிம் தெரு பகுதியில் கொரனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் அன்பழகன், காவல் கண்காணிபாளர் பாண்டியராஜன், நகராட்சி ஆணையர் சுதா ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,  கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 71 நபர்களில் 43 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதில் 27 பேர் டிஸ்சார் ஆகி சென்று விட்டனர். 9 பேர் ரத்த மாதிரி இன்று அனுப்பபட்டு உள்ளது. 2 பேருக்கு கொரனோ உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்,

இதில் 10 பேர் கண்காணிப்பில் உள்ளனர். டெல்லி சென்று வந்தவர்கள் 39 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம்னையில் அனுமதி 27 பேர் முடிவு வர இருக்கிறது.கொரனோ தடுப்பு நடவடிக்கைகாக கிருமி நாசினிகள், இயந்திரம், மாஸ்க், கையுறை வாங்கப்பட்டுள்ளது. 6000 சுகாதாரதுறை, வருவாய் துறை, மருத்துவ துறை, காவல்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பொது இடங்களில் சுற்றி திரிந்த 188 ஆதரவற்றோர்களை அரசுப் பள்ளியில் தங்க வைத்து 3 வேளை உணவு வழங்கப்படுகிறது. நகரின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளது. காமராஜ் மார்கெட் பகுதியை ஒட்டி டெல்லி சென்று வந்தவர்கள் இருப்பதால் மூடப்பட்டது. கரூரில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உடைகள் 6 ஆயிரம் உடைகளுக்கு வாங்க ஆர்டர் போடப்பட்டுள்ளது. டெல்லி சென்று திரும்பியவர்கள் 36 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்னும் நிறைய அடையாளம் தெரியாமல்பிருக்கும் நிலையில் கரூரில் ஒரே நாளில் அனைவரையும் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதியில் 50 பேரை அடையாளம் காணப்பட்டு அவர்களை கண்காணிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்பவர்கள் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 550 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும், பள்ளிகள், கல்லூரிகள் 5000 பேர் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நியாய விலை கடைகளில் நிவாரண தொகை மற்றும் பொருட்கள் வழங்கும் பணி இன்று துவங்கியது. டோக்கன் கொடுக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 100 நபர்களுக்கு பொருட்கள் வழங்கி வருகிறது. பொது இடங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது வழக்கு தொடரப்படுகிறது. வெளிநாடு சென்று திரும்பியவர்கள் 760 பேர். அவர்களை சார்ந்த 1320 பேரில் பலரும் கண்காணிப்பு காலம் முடிவடைந்ததால் மீதமுள்ள 370 பேர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.  மளிகை சாமான்கள், காய்கறிகள் வீடுகள் தோறும் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.ஏற்கனவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 வெண்டிலேட்டர்கால் இருக்கும் நிலையில் மேலும் 5 வெண்டிலேட்டர் கொண்டு வந்து பொறுத்தப்பட்டு வருகிறது. கறிக்கடைகளில் கூட்டம் அதிகளவில் இருப்பதால் அது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும். கரூர் மாவட்டத்தில் போதிய பொருட்கள் கையிருப்பில் இருக்கிறது. 

சமைத்த உணவுகளை வழங்க கூடாது, அது போன்று வழங்கினால், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரூர் நகரில் வழக்கம் போல் செயல்படும். மாவட்ட முழுவதும் சுற்றி வேலைகள் அதி வேகத்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து துறை அதிகாரிகள் அடிக்கடி கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. உணவு பொருட்கள் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியம் நிதி 14 கோடியே 10 லட்ச ரூபாய் கொரனோ தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரிடம் வழங்கப்படும். கரூர் மாவட்டத்தில் 1 கோடி ரூபாய் பொது மக்களிடம் இருந்து முதல்வர் நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. அவை பின்பு முதல்வரிடம் வழங்கப்படும். கொரனோ வைரஸ் நோயினால் ஒருவர் கூட பாதிக்கப்பட கூடாது என்பதில் கவனமாக செயல்படுகிறோம் என்றார்.