திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 13 ஜனவரி 2020 (20:06 IST)

”நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றினோம், நீங்கள் அல்வா கொடுத்தா ஏமாற்றினீர்கள்??” ஸ்டாலின் பதிலடி

பொங்கல் திருநாள் வரவிருப்பதை முன்னிட்டு சென்னையில் பள்ளி ஒன்றில் பொங்கல் விழாவில் கலந்துகொண்டார் ஸ்டாலின்

பொங்கல் திருநாள் வரவிருப்பதை முன்னிட்டு சென்னை கொளத்தூர் ஜெயின் பள்ளியி பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்துகொண்டார்.

இந்நிலையில் அங்கு பேசிய அவர், “தை பிறக்கிறது, விரைவில் வழிபிறக்கும், சட்டமன்ற தேர்தலில் திமுகவே வெல்லும் என்று கூறியுள்ளார்.

மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குழந்தையை மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல் திமுக மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுவிட்டது என கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “நாங்கள் மிட்டாய் கொடுத்து வெற்றிபெற்றோம் என்றால் நீங்கள் தேனியில் அல்வா கொடுத்து வென்றீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.