செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 13 ஜனவரி 2020 (16:41 IST)

எதிர்கட்சிகள் கூட்டம்; காங்கிரஸை புறக்கணித்த திமுக??

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் எதிர்கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தை திருணாமூல் காங்கிரஸ், சிவசேனா, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்திருந்த நிலையில், திமுக இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும் இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திருமாவளவன் பங்கேற்றுள்ளார்.

சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி “உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் பெரும்பான்மையாக வெற்றி பெற்ற நிலையில் ஊராட்சி தலைவர் பதவியோ, துணை தலைவர் பதவியோ ஒன்று கூட திமுக வழங்கவில்லை” என அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.