பாஜக தலைவர் ஆகிறாரா நயினார் நாகேந்திரன்??

Arun Prasath| Last Modified திங்கள், 13 ஜனவரி 2020 (19:34 IST)
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டத்தை தொடர்ந்து, தமிழக பாஜக மாநிலத் தலைவராக யாரை நியமிக்கலாம் என அக்கட்சிக்குள் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

அக்கட்சியை சேர்ந்த ஹெச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன் உட்பட பலரில் யாரேனும் ஒருவர் தலைவராக நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :