1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 மார்ச் 2021 (20:00 IST)

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்: ஸ்டாலின் அறிவிப்பு

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்:
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு உறுதிமொழியை திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்து வருகிறார்
 
திருச்சியில் திமுக மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் இந்த மாநாட்டில் உரையாற்றிய திமுக தலைவர் முக ஸ்டாலின் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார் 
 
மேலும் பள்ளி இடைநிற்றல் சதவீதம் குறைக்கப்படும் என்றும் பட்டதாரிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறி உள்ளார். மேலும் நகர்ப்புறத்தில் புதிதாக 35 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு அளிக்கப்படும் என்றும் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்கள் தன்னிடம் இருப்பதாகவும் ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தமிழகத்தின் பசுமைப் பரப்பளவை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
 
அனைத்து துறைகளையும் சீரமைப்பது எனது முதல் பணி என்றாலும் நீர்வளம் கல்வி மற்றும் சுகாதாரம் சமூக நீதி உள்ளிட்ட 7 துறைகள் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை என்றும் அவர் குறிப்பிட்டார்