திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

காங்கிரசுக்கு திமுக குறைவான தொகுதிகள் கொடுத்ததற்கு இதுதான் காரணம்: ப.சிதம்பரம்

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு திமுக குறைவான தொகுதிகள் கொடுக்க காரணம் இதுதான் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர் கூட்டத்தில் பேசிய சிதம்பரம் ’கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 63 தொகுதிகளை கொடுத்தது. ஆனால் காங்கிரஸ் வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டும் தான் வென்றது 
 
அதேபோல் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 40 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியது. ஆனால் 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் கொடுத்தால் அவர்கள் வெற்றி பெறுவார்களா? என்ற கவலை திமுகவுக்கு தோன்றியதால்தான் காங்கிரஸ் கட்சிக்கு குறைவான தொகுதிகளை கொடுத்துள்ளது என்று கூறினார் பா சிதம்பரத்தின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது