செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

திமுக அகலவேண்டியது காலத்தின் கட்டாயம்! கமல்ஹாசன் பேச்சு!

திமுக தோன்றியது காலத்தின் கட்டாயம் அதுபோல இப்போது திமுக அகலவேண்டியதும் காலத்தின் கட்டாயம் என கமல்ஹாசன் பேசியுள்ளார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை பெருமளவில் நம்பியிருக்கிறது. இதுவரை எந்த பெரியக் கட்சியும் அவர்களோடு கூட்டணி வைக்கவில்லை. காங்கிரஸை கூட்டணிக்குள் இழுக்க கமல் தூண்டில் போட்டு வருகிறார். இந்நிலையில் அம்பத்தூர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திமுக அகலவேண்டியது காலத்தின் கட்டாயம் எனக் கூறியுள்ளார்.

மேடையில் பேசிய அவர் ‘திமுக தோன்றியது காலத்தின் கட்டாயம். இன்று அது அகல வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயம். அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியவர்கள் மறைந்தபோதே அவர்களின் கொள்கைகளும் காலாவதி ஆகிவிட்டன.’ எனப் பேசியுள்ளார். அவரின் பேச்சு சமூகவலைதளங்களில் திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.