வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (10:09 IST)

பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்: கோலாகமாக தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருவிழா தேரோட்டம், இன்று கோலாகலமாக தொடங்கியது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில், கடந்த 27 ஆம் தேதி, ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவில் தினமும் ஆண்டாள்-ரெங்கமன்னார் வீதி உலா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று, காலை தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. தேரில் 7 வடங்கள் இணைக்கப்பட்டுள்ளன எனவும், அதில் 2 வடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.எல்.ஏக்கள் சந்திரபிரபா, ராஜவர்மன், கலெக்டர் சிவஞானம், போலீஸ் சூப்பிரண்ட் ராஜராஜன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். மேலும் இந்த தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.