1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2019 (08:38 IST)

மூடப்படும் கிழக்கு கோபுர வாசல்; அத்திரவரதர் தரிசனம் ரத்து: காரணம் என்ன??

காஞ்சிபுரத்தில் அருள் பாலிக்கும் அத்திவரதரின் தரிசனம் இன்று குறிப்பிட்ட நேரத்திற்கு ரத்து செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. 
 
40 வருடங்களுக்கு ஒரு முறை மக்களுக்கு அருள் வழங்கும் அத்திவரதர் தற்போது நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இந்நிலையில் இன்று கிழக்கு கோபுர வாசல் மூடப்பட்டு 5 மணி முதல் 8 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
 
ஆம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி, இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
அதோடு, மதியம் 2 மணியுடன் கிழக்கு கோபுரம் மூடப்படுகிறது. முக்கிய பிரமுகர்கள் தரிசன வழியும் மதியம் 2 மணிக்கு மூடப்படும். மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம், அதன் பின்னர் மீண்டும் 8 மணிக்கு தரிசனம் துவங்கும்.  
 
மாலை 5 - 8 தரிசனம் ரத்து செய்யப்படுவதால் இரவு வழக்கமான நேரத்தை விட கூடுதல் நேரம் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.