1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2019 (17:26 IST)

மருத்துவனைக்கு விசிட் அடித்த 6 அடி நீள பாம்பு.. நோயாளிகள் அலறல்

நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் 6 அடி நீள பாம்பை கண்டதால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பிரசவ வார்டில் கை கழுவ செவிலியர் ஒருவர் சென்றபோது, அங்கே 6 அடி நீள பாம்பு சுருண்டு கிடந்ததை கண்டு கூச்சலிட்டார். உடனே நிலக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு மருத்துவமனை ஊழியர்கள் தகவல் அளித்தனர். அதன்பின்பு அந்த 6 அடி நீள பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் பாம்பு இருந்த விஷயத்தை அறிந்தவுடன், நோயாளிகள் அலறியடித்து மருத்துவமனையை விட்டு வெளியே ஓடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.