பலத்த எதிர்ப்பு எதிரொலி: தஞ்சையில் இருந்து கிளம்பிய மத்திய அதிரடிப்படையினர்

திங்கள், 30 ஏப்ரல் 2018 (10:58 IST)
தஞ்சை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும் அரசியல் கட்சியினர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசு டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் பணியில் மும்முரமாக இருந்தது.
 
இந்த நிலையில் மீத்தேனுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்த அரசியல் கட்சிகளும் அந்த பகுதி மக்களும் தயாராகி வந்த நிலையில் திடீரென நேற்று மத்திய அதிரடி படையினர் டெல்டா மாவட்டங்களில் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
மத்திய அதிவிரைவு படையினர் போராட்டத்தை அடக்க குவிக்கப்படவில்லை என்றும் இதுவொரு சாதாரண நிகழ்வு என்று விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும் இதற்கு அரசியல் கட்சிகள் கடும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சற்றுமுன்னர் தஞ்சையில் முகாமிட்டிருந்த அதிவிரைவுப் படையினர் முகாமை காலி செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

எல்லாம் காட்டு

பழனி கோயில் நில விவகாரம்: திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் அதிரடி சஸ்பெண்ட்!

குழந்தைகள் மற்றும் பாராசிட்டமால் மருந்துகளில் ஆல்கஹால்? தமிழக சுகாதாரத் துறை விளக்கம்!

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறந்து விட முடியாது: கர்நாடகா மீண்டும் திட்டவட்டம்!

நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் சாதனங்களுக்கு தடை: மக்களவை செயலகம் அதிரடி அறிவுறுத்தல்!

லஞ்சம் வாங்கிய விவகாரம்!.. ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி கைது!...

அடுத்த கட்டுரையில்
Show comments