திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 நவம்பர் 2019 (16:21 IST)

ரயில்களில் குளிக்க கூடாது; ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டுகோள்!

சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் மாலை போட்டுக்கொண்டு பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தேசம் முழுவதும் பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் மாலை போட்டுக்கொண்டு வழிபட வருகிறார்கள். வருடம்தோறும் சபரிமலைக்கு செல்பவர்களில் ஆந்திரா, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம். பெரும்பானமையான பக்தர்கள் ரயில்களில் பயணம் செய்து சபரிமலை செல்கிறார்கள். அப்படி செல்பவர்கள் பூஜைகள் செய்வதற்காக ரயில்களில் கழிவறைக்குள்ளேயே குளிப்பதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

மேலும் கற்பூரம் போன்றவற்றை ஏற்றி ரயில்களுக்குள்ளேயே பூஜைகள் செய்வதும் பயணத்திற்கு ஆபத்து ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. இதனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் ரயில்களுக்குள் குளிப்பது, பூஜை செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டாம் என தென்னக ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.