அர்த்தமில்லாமல் பேசுபவர் அமைச்சர் ஜெயக்குமார்! – டிகேஎஸ் இளங்கோசன் காட்டம்!
அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சு ஆணவே பேச்சே தவிர அதில் அர்த்தமில்லை என டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
2021 சட்டசபை தேர்தலுக்கு இரண்டு வருடங்கள் இருக்கும் சூழலில் தேர்தல் பரபரப்புகள் கட்சிகளிடையே இப்போதே வெளிப்பட தொடங்கியிருக்கின்றன. மேலும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரும் 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக அரசின் திட்டங்களை ஒவ்வொரு முறை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சிக்கும் போதும் மற்ற அதிமுக அமைச்சர்களுக்கு முன்னாலேயே ஆஜராகி உடனடியாக பதிலடியாக ஏதாவது பேசுபவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். ஒவ்வொரு முறையும் ரைமிங்கில் ஏதாவது பதிலளித்து ட்ரெண்ட் ஆவார் ஜெயக்குமார்.
ஜெயக்குமாரின் இந்த பதில் சொல்லும் விதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் ”அவர் அதிகாரத்தில் இருக்கும் ஆணவத்தில் பேசுகிறாரே தவிர அர்த்தத்தோடு எதையும் அவர் பேசவில்லை. மீன்வளத்துறை மற்றும் பணியாளர் துறை பற்றியே இன்னமும் முழுமையாக தெரியாத அமைச்சர் தன்னை செயல் முதல்வராக நினைத்துக் கொண்டு யார் எந்த துறை பற்றி பேசினாலும் இவர் வந்து பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.