ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

ரிமோட் மூலம் நகர்மன்ற தலைவர் கொலை வழக்கு: அனைவரும் விடுதலை!

சிவகங்கையில் ரிமோட் மூலம் நகர் மன்ற தலைவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2007ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி சிவகெங்கை நகர்மன்ற தலைவர் முருகன் அலுவலகத்தில் இருந்து தனது காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது காரில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கையைச் சேர்ந்த மணிமுத்து, குமரன் (எ) மந்தக்காளை, பாலச்சந்தர் (எ) பாலா, சரவணன், மாமுண்டி (எ) செந்தில், கே.கண்ணன், பாண்டி, பி.கண்ணன், முருகபாண்டி, கம்பம் மனோகரன், சென்னை வீரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
 
இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்