புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 மே 2021 (11:29 IST)

இதோ கிளம்பிட்டாங்கல்ல.. டாஸ்மாக் கடையில் சரக்கு திருட்டு! – போலீஸார் விசாரணை!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கால் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடைபெற தொடங்கியுள்ளன. சீர்காழி அருகே கடவாசல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த கும்பல் ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.