வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 மே 2021 (09:31 IST)

எந்த முதல்வரும் செய்ய துணியாத செயல் இது! – உதயநிதி நெகிழ்ச்சி ட்வீட்!

கோவையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா வார்டிற்குள் சென்று ஆய்வுகள் மேற்கொண்டது குறித்து உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வாறாக நேற்று கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை சென்ற அவர் பிபிஇ கிட் கவச உடை அணிந்து கொண்டு கொரோனா வார்டிற்குள் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக எம்.எல்.ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் “கோவை ESI மருத்துவமனை கொரோனா வார்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் PPE உடையணிந்து ஆய்வு செய்துள்ளார்கள்.எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது. கழக அரசு மக்களுடன் நிற்கிறது. நம் முதல்வரின் ஆற்றல்மிகு நிர்வாகத்திறன் தமிழகத்தை பெருந்தொற்றிலிருந்து மீட்டெடுக்கும்” என்று கூறியுள்ளார்.