1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 ஜூன் 2023 (14:14 IST)

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம்

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நாளையுடன் ஓய்வு பெற இருப்பதை அடுத்து புதிய தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா என்பவர் நியமன செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது 
 
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவ் தாஸ் மீனாசிவில் இன்ஜினியரிங் படித்தவர். ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலை பட்டமும் பெற்றவர். ஜப்பான் மொழியை கற்றுள்ள இவர் 1989 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார் 
 
காஞ்சிபுரத்தில் உதவி ஆட்சியராக பயிற்சி தொடங்கிய இவர் கோவில்பட்டி உதவி ஆட்சியர், வேலூர் உதவி ஆட்சியர், என படிப்படியாக பணி உயர்வு பெற்றார். 
 
30 ஆண்டுகள் ஐஏஎஸ் அனுபவம் கொண்ட இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 தனி செயலாளர்களில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran