வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2019 (17:48 IST)

சட்டை கிழிஞ்சுது...தேமுதிக - பாமக இடையே கடும் மோதல் ! விக்கிரவாண்டியில் பரபரப்பு ..வைரல் வீடியோ

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆக்கிய தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் முடியும் தருவாயில் உள்ள நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில்,உள்ள கல்யாணம்பூண்டி என்ற கிராமத்தில்  தேமுதிக - பாமக ஆகிய ஒரே கூட்டணிக்கட்சித் தொண்டர்களிடையே இன்று மோதல் எழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் இன்று சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றுவருவதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்தனர். 
 
தற்போது வரை விக்கிரவாண்டி தொகுதியில் 65.79 % வாக்குப்பதிவும், நாங்குநேரியில் 58. 12 வாக்குப் பதிவும், புதுவை காமராஜ் நகர் தொகுதியில் மதியவம் 3 மணி நிலவரப்படி 56.16 % வாக்குகள் பதிவாகி யுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
இந்நிலையில் தேர்தல் முடியும் தருவாயில் உள்ள நிலையில் தேமுதிக - பாமக ஆகிய ஒரே கூட்டணிக்கட்சிகளுக்குள் இன்று மோதல் எழுந்தது, இதில் இருதரப்பினரும்  சண்டையிட்டு  சட்டையை கிழித்துக்  கொண்டனர். பூத் பணத்தை பங்கிட்டுக் கொல்வதால் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த மோதம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. .
 
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டு தோல்வியடைந்தன.
இந்நிலையில் இன்றைய இடைத்தேர்தலில் தேமுதிக பாமக ஆகிய இரு கட்சியினர் இடையே மோதல் எழுந்துள்ளதால்  இருகட்சி தலைமைக்கும், அப்பகுதி மக்களிடையேயும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.