நாங்குநேரி பக்கம் கனிமொழி தலைகாட்டாததற்கு காரணம் என்ன?

Sugapriya Prakash| Last Updated: திங்கள், 21 அக்டோபர் 2019 (12:29 IST)
தூத்துக்குடி மாவட்ட எம்பி கனிமொழி பிரச்சாரத்திற்கு வராததற்கான காரணம் என்னவென தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், பிரச்சாரத்தின் போது விக்ரவாண்டியில் மட்டும் 2 நாட்கள் வேட்பாளரை ஆதரித்து வாக்குகேட்ட கனிமொழி, நாங்குநேரி பக்கம் தலைகாட்டவில்லை. 
 
இதற்கு கனிமொழிக்கு தலைமை மீதுள்ள அதிருப்திதான் காரணம் என கூறப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக கட்சியில் தனக்கு முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக கருதிய கனிமொழி, இதை வெளிப்படுத்தும் விதமாக இடைத்தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணித்ததாக கூறப்பட்டது. 
 
ஆனால், உண்மையில் சர்வதேச நாடாளுமன்ற யூனியன் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக செர்பியாவுக்கு கனிமொழி சென்றிருந்ததால்தான் பிரச்சாரத்திற்கு வரவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.  செர்பியா பயணத்தை முடித்துக்கொண்டு சனிக்கிழமை தன கனிமொழி சென்னை திரும்பினாராம். 


இதில் மேலும் படிக்கவும் :