வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (23:33 IST)

உதயநிதியை கரூருக்கு அழைத்து சென்று அவமானப்படுத்திய செந்தில்பாலாஜி – செம கடுப்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

உதயநிதியை கரூருக்கு அழைத்து சென்று அவமானப்படுத்திய செந்தில்பாலாஜி – செம கடுப்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
 
தமிழக அளவில் மட்டுமல்லாமல், இந்திய அளவில் வெகுவிரைவாக உள்ளாட்சி முதல், எம்.எல்.ஏ என்று அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகிய கனவுகளுடன் சென்று அதை நனவாக்கி அமைச்சர் பதவியுடன் மட்டுமே இருந்து வருபவர் தற்போதைய தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, முதன்முதலில் மதிமுக கட்சியிலிருந்து திமுக ஒன்றிய கவுன்சிலர் பின்பு அதிமுக கட்சியில், வி.பி.கலைராஜனை முன்னிலைப்படுத்தி செந்தில்குமார் என்கின்ற பெயரை செந்தில்பாலாஜி என்று மாற்றிய பின்னர், கரூர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர், அப்போது இரத்த தானத்தினை தாண்டி, அப்போதைய முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு செந்தில்பாலாஜியின் உடல் தானம், பின்பு கரூர் மாவட்ட அதிமுக செயலாளர், 2006 ல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர், 2011 ல் அதிமுக ஆட்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் என்று பதவி உயர்வு பெற்றதோடு, அடுத்த முதல்வர் யார், என்று அப்போது கேட்டால், ஒ.பி.எஸ் பெயரை பின்னுக்கு தள்ளி, செந்தில்பாலாஜி தான் என்று கூறும் அளவிற்கு பெயரை எடுத்தவர் தான் தற்போதைய திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, அப்படி பட்ட பெயர் எடுத்தவர் என்பதனை தற்போதைய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 2016 ம் ஆண்டில் கரூர் அடுத்துள்ள குளித்தலை பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது, இவர் கேட்ட கேடெல்லாம் முதல்வர், அனைத்து தரப்பிலும் மந்திரி பதவியை மாற்றினார்கள், ஆனால், இவரை மட்டும் மாற்றவே இல்லை, அந்த அளவிற்கு முதல்வர் கனவில் வலம் வந்தவர் தான் இந்த செந்தில்பாலாஜி என்று அவரே பேசிய காட்சி, இன்னும் அவரது youtube பக்கத்தில் நம்மால் காணமுடிகின்றது. அப்படி இருக்க, அப்போதைய முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான செல்வி ஜெயலலிதா இறப்பிற்கு பின்பு, ஆட்சி யார் அமைப்பது என்று கூவத்தூர் பங்களா வரை இருந்த நிலையில், அப்போது அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வாக அதிமுக வில் இருந்த நிலையில், சசிகலா தலைமையிலான அதிமுக ஒரு புறம், ஒ.பி.எஸ் தலைமையிலான அதிமுக ஒரு புறம் என்றெல்லாம் இருக்கும் போது, இவர் பக்கா டிடிவி தினகரன் அணிக்கு வந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட அப்போதைய 18 எம்.எல்.ஏ க்களில் செந்தில்பாலாஜி உள்ளிட்டவர்களும் அமையும் நிலையில், பின்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினை உருவாக்கி கரூர் மாவட்ட செயலாளரும், கழக அமைப்பு செயலாளர் பதவியெல்லாம் பெற்று பின்னர் திமுக விற்கு மாறியவர் செந்தில்பாலாஜி, அந்த திமுக விற்கு மாற அச்சாரமாக இருந்தவர் தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இப்படி இருக்க, செந்தில்பாலாஜி, கரூரில் ஏற்கனவே இருந்த அதிமுக அமைச்சரும், எம்.எல்.ஏ வுமான எம்.ஆர்.விஜயபாஸ்கரை கடந்த சட்டமன்ற தேர்தலில் வெள்ளிக்கொலுசு  கொடுத்து, வாக்குகளை அள்ளியவர் செந்தில்பாலாஜி, பின்னர் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பதவி என்றெல்லாம் விட, தற்போது திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பெருமை மிகு செந்தில்பாலாஜி என்றே அழைக்கின்றாராம், இந்நிலையில் இவரை கொண்டு வந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஒரம் கட்டி, கொங்கு மண்டலத்தினை ஆட்சி செய்ய கிளம்பினார். ஏனென்றால் அங்கு 10 எம்.எல்.ஏ க்கள் உள்ள நிலையில்,. யாரும் அமைச்சர் இல்லை என்று கூறி, தற்போதைய செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சருமான வெள்ளக்கோயில் சாமிநாதனை ஒவர்டேக் செய்து கோவையில் உள்ள பீளமேட்டில் வாரத்தில் 4 நாட்களும் மீதமுள்ள 3 நாட்கள் கரூரிலிலும் அரசியல் செய்து வருகின்றார். இந்நிலையில், திமுக வினரிடையே செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் அதிக அளவில் உள்ளதாகவும், எப்படி கரூரையும் பார்க்கின்றார், அதே நேரத்தில் கோவையையும் கவனித்து வருகின்றார் என்றெல்லாம் பெயர் எடுத்ததோடு. ஆனால் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அப்படி, அல்ல திருச்சியை தாண்டி அரசியல் செய்ய வர மாட்டீங்கின்றார். தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம் பகுதிகளில் அவர் செய்யவில்லை என்று கேள்விகளை எழுப்பும் வண்ணம் செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் இருந்தது. இந்நிலையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் நண்பர்கள், இவர்களது தந்தையை போலவே இவர்களும் இணைந்த கைகள் போல, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கி தீரவேண்டுமென்று பல்வேறு நடவடிக்கைகளை திமுக விற்கு விஷ்வாசமாக செய்து வரும் நிலையில்,. இந்த செண்டிமெண்ட் செந்தில்பாலாஜி விஷயமும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சீண்டுவதும் திமுக வின் அரசியல் வட்டாரம் வரை புகைந்துள்ளது. ஆனால், இதனையெல்லாம் உற்றுநோக்கிய உதயநிதி ஸ்டாலின், முன்னதாக திருச்சியில் நகரமைப்பு உள்ளாட்சி தேர்தலை முடித்து விட்டு பின்னர் கரூரில் பரப்புரை நிகழ்த்தலாம் என்று நினைத்த நிலையில், இந்த விவகாரத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம், கரூருக்கு 8 ம் தேதி இரவு மிகப்பெரிய ஹோட்டலுக்கு வந்து அங்கே பேச்சுவார்த்தை நட்த்தியும் உள்ளார். இதில் சீனியர்கள் அதாவது காலம், காலமாக திமுக வில் இருந்தவர்களுக்கு நகரமைப்பு உள்ளாட்சி தேர்தலில் சீட் கொடுக்கவில்லை, மூத்த நிர்வாகிகளை மதிக்கவில்லை ஆகியவைகள் குறித்தும், கரூர் மாவட்ட அளவில் எம்.பி ஜோதிமணி கலைஞர் அறிவாலயம் பிரச்சினை, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சீட் கொடுத்தும், அங்கேயே திமுக வில் வேட்பாளர்களை போட்டது எல்லாம் பேசிய பிறகு அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சீண்டக்கூடாது என்றெல்லாம் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக தெரியவருகின்றது. ஆனால், 9 ம் தேதி காலை, கரூர் ரவுண்டானாவில் தேர்தல் பரப்புரையை துவக்கிய உதயநிதி ஸ்டாலினை, செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களும், செந்தில்பாலாஜியால் உதயநிதி ஸ்டாலின் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்கள் அனைவரும் நகைக்கடன் தள்ளுபடி எல்லாம் எங்கே?